search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதிர் அகர்வால்"

    அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். #SudhirAgarwal #SeniorJudge #HighCourt
    பிரயாக்ராஜ்:

    அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனதில் இருந்து அவர் இத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். ரிட், சிவில், குற்றவியல், வரி விவகாரம், மேல்முறையீடு என அனைத்துவிதமான வழக்குகளையும் அவர் விசாரித்துள்ளார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்த அமர்வில் சுதிர் அகர்வாலும் இடம்பெற்று இருந்தார். அனைத்து அரசு அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளித்து, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.

    இவர் அளித்த 1,788 தீர்ப்புகள், சர்வதேச, தேசிய சட்ட பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. நீதிபதி சுதிர் அகர்வால், 2020-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ஓய்வுபெறுகிறார்.  #SudhirAgarwal #SeniorJudge #HighCourt
    ×